Monday, March 29, 2010

கள்ளி!

பார்த்தோம், பிறகு பேசினோம்,
தயங்கினோம், பிறகு மயங்கினோம்,

பெரியவர்களோ எங்கள் மணத்தை பற்றி பேசினார்கள்,
நாங்களோ எங்கள் மனதை பேச வைத்தோம் ,

என் எண்ணங்களை சொன்னேன், மவுனமாய் அமர்ந்தாள்,
என் எண்ணங்களையே சொன்னாள், மவுனமாய் ரசித்தேன்,

கோடையின் வெப்பத்தை உணரவில்லை, பனியின் குளிரை உணரவில்லை,
உணர்ந்ததெல்லாம், அந்த முதல் மழையின் வாசம்,

கடத்தினதோ 'அவளை' நான், ஆனால்
இழந்ததோ 'என்னை' அந்த கள்ளியிடம்!